பொலிஸ் உத்தியோகத்தர்களே பாடசாலைகளில் அதிகளவில் இருந்தனர் - ஜோசப் ஸ்டாலின்
பொலிஸ் உத்தியோகத்தர்களே பாடசாலைகளில் அதிகளவில் இருந்தார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதிக எண்ணிக்கையில் பயிலுனர் பட்டதாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்களுமே பாடசாலைகளில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட பலரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது அவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு அமைச்சரவை துணைக்குழு செய்துள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
