அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார்: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை
கிளிநொச்சி கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய பொலிஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞனை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக குறித்த இளைஞன் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வருகின்ற 21 ஆம் திகதி மனிதஉரிமைகளை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பானை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri