கிளிநொச்சியில் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் : சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த (29.11.2023) ஆம் திகதி அன்று 860 000 பெறுமதியான தங்கநகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த களவு தொடர்பான விசாரணைகளுக்கமைவாக கிளிநொச்சி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், தொலைபேசி ஒன்று, 198 000 பணம் மற்றும் ஹெரோயின் 430mg , வாகனம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்வத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
