அதிகாரசபையின் தரவுகளை அழித்த பொறியியலாளருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தரவுகளை நீக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பான வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த மென்பொருள் பொறியியலாளர் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி திவுலபிட்டிய வெல்லப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் போது, தாம், ஒரு சிறப்பு கட்டளையைப் பயன்படுத்தி தரவுத்தளத்திலிருந்து தொடர்புடைய தரவுகளை அழித்ததமையை குறித்த பொறியியலாளா் ஏற்றுக்கொண்டாா்.