நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸார்: அமெரிக்க தூதுவர் கண்டனம் (PHOTO)
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்ளை பொலிஸார் கைது செய்தமைக்கு அமெரிக்க தூதுவர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கைதுக்கு அஞ்சாமல் போராட்டம் நடத்தும் சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வன்முறையை புறக்கணிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதியான போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The freedom to engage in peaceful protest without fear of arrest is fundamental to democracy. The US urges restraint on all sides and reiterates our support for the rights of peaceful protesters.
— Ambassador Julie Chung (@USAmbSL) May 4, 2022



