வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
வவுனியா நகரப் பகுதியில் ஐஸ்போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் தலைமைப் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்னி தலைமையில் பொலிசார் வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, 15 கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யபபட்டதுடன், அவரிடம் இருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சோந்த 23 வயதுடைய இளைஞராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.