வெள்ள பகுதிகளிலுள்ள வீடுகளில் நுழையும் மர்ம கும்பல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெள்ளம் காரணமாக குடியிருப்பாளர்களால் தற்காலிகமாக கைவிடப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்த குழுக்களை கைது செய்ய பொலிஸார் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக குடியிருப்பாளர்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வீடு கொள்ளைகளில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே வெள்ளம் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்ட வீடுகளைப் பாதுகாக்கவும், அந்த வீடுகளைக் கொள்ளையடிப்பவர்களைக் கைது செய்யவும் சாதாரண உடைகள் மற்றும் சீருடையில் உள்ள அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், ஏதேனும் குழுக்கள் கொள்ளையடிக்க முயன்றால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுளள்னர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam