பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Jaffna Nothern Province Law and Order
By Theepan Jul 20, 2026 11:34 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

அதேவேளை குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து, சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி

அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி

பலாலி பொதுநோக்கு மண்டபம்

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்தளங்களில் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை | Police Action At Palali Public Hall

இதனையடுத்து பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடாத்தியிருந்தனர்.

குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா - பொலிஸ் விசாரணை ஆரம்பம்

குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா - பொலிஸ் விசாரணை ஆரம்பம்

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் 

எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அந்தப் பகுதியில் கொட்டகை அமைக்க பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை | Police Action At Palali Public Hall

போராட்டக்காரர்கள் குறித்த பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதுடன், மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து உட்கொள்வதுடன் அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும், தற்காலிக மலசல கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

வயோதிப பெண்கள், முதியவர்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார் எடுத்து சென்றமை அந்தப் பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு

எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US