கொழும்பின் முக்கிய பல வீதிகளை முடக்கிய பொலிஸார்: குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (video)
புதிய இணைப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளது.
தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அண்மித்த வீதியை பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி தடை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
வீதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று முற்பகல் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி வீதிகளில் புதைத்து நிரந்த வீதி தடைகள் போல அவற்றை பொலிஸார் அமைத்துள்ளனர்.
கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பல இடங்களில் இவ்வாறு நிரந்தரமான வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிகளில் வருவோர் இந்த பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீதித் தடைகளால் காலி முகத்திடலை நோக்கி வருகின்ற அனைத்து பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.












படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
