“முட்டை தாக்குதல்” விசாரணையி்ல் அரசியல் தலையீடு. -ஜேவிபியின் குற்றச்சாட்டு!(Photos)
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மீதான முட்டை தாக்குதல் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற இரண்டு சம்பவங்களில், காவல்துறையினர் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே ஜே.வி.பி தொடர்புடைய விடயத்தின் காவல்துறையினர் முறையான விசாரணையை நடத்தவேண்டும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கோரியுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டமை, தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த விசாரணைகளை நிறுத்துவதற்கு உயர் அரசியல் அதிகாரத்தின் தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ராகம மருத்துவ பீடத்தின் மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதலின்போது, மாணவர்கள் தடுத்து வைத்திருந்த வாகனத்தைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை துரிதமாகச் செயற்பட்டு காவல்துறை கைது செய்துள்ளது
ராகம சம்பவ விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
எனினும் முட்டைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்