ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி! நேட்டோ படை தரையிறங்குமென எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு எதிரான போரில் போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் படை உக்ரைனில் தரையிறங்கலாம் என நேட்டோ பாதுகாப்பு முகாமின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வெல்ல முடியவில்லை என்றால், போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைனில் துருப்புகளை தரையிறக்க தயாராக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை பெற வேண்டும்
உக்ரைன் கண்டிப்பாக உளவுத்துறை பகிர்வு, இராணுவ பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்குதல் ஆகியவற்றில் நேட்டோ நாடுகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், நேட்டோ நாடுகளுக்கு இடையே உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை வலுப்படுத்த போலந்து தயாராக இருக்கும் என்றும், இந்த உதவியைப் பெற உக்ரைனுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆண்டர்ஸ் ராஸ்முஸன் 2009-2014 ஆண்டுகளில் நேட்டோவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
