ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க முயலும் சஜித் தரப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளிப்படுத்துகின்றது என்று அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முறையாக இடம்பெற்று வரும் விசாரணையை மூடிமறைக்கும் நோக்கில் எதிரணிகளால் பெரும் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது.
சஜித் தரப்பு
இந்தச் சதிகளில் அரசு சிக்காது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாத வேளை, அருண ஜயசேகரவின் (தற்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்) பெயர் சஜித் தரப்புக்கு நினைவுக்கு வரவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றில் கூட இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தற்போது அவரின் பெயர் திடீரென நினைவுக்கு வந்துள்ளது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரசுடன் தொடர்புபட்ட ஒருவரை இதனுடன் சஜித் தரப்பு தொடர்புபடுத்த முற்படுவது ஏன்? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மற்றும் உண்மையான குற்றவாளிகளை மூடி மறைக்கும் தேவைப்பாடு எதிரணிக்கு இருப்பது இதன்மூலம் தெரிகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




