பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்ட சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
நுவரெலியா மற்றும் ஹை ஃபொரஸ்ட் இடையே இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹை ஃபொரஸ்டில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வழக்கமான சோதனை
வழக்கமான சோதனைகளின் போது டிப்போ அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இயந்திரத்தை சுற்றி வெள்ளையான இரசாயனங்கள் காணப்பட்டதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொலிஸில் முறைப்பாடு
வேண்டுமென்றே நாசவேலை செய்யப்பட்டதாக சந்தேகித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பேருந்து இயந்திரத்தை இயக்காமல் முழு ஆய்வுக்காக டிப்போவிற்கு பேருந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri