ஜெலென்ஸ்கி மீது கொலை முயற்சி! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ரஷ்யர்கள் கொல்ல முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கெர்சன் நகரத்தை நேரில் பார்வையிட சென்ற போதே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் நோவா ககோவ்கா அணை சேதமடைந்ததால் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே 4.8 பில்லியன் கேலன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
கொலை முயற்சி காணொளிகள்
Kherson நகரின் பல குடியிருப்புகளின் கூரை மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு சில பகுதிகள் முற்றிலும் நீருக்கடியில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் 42,000 பேர் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (08.06.2023) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கெர்சன் பகுதிக்கு சென்று, அங்கு வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
Russians tried to kill Zelenskyy during his visit to Kherson
— NEXTA (@nexta_tv) June 8, 2023
On June 8, Volodymyr Zelenskyy arrived in #Kherson region, where dozens of settlements were flooded after the explosion of the #KakhovkaHPP.
The first video shows Zelenskyy standing with local residents near the… pic.twitter.com/xdbqLAuQ29
அவர் அங்கு வருவார் என அறிந்த ரஷ்ய படையினர், அவரை குண்டு வீசி கொல்ல முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |