சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி இன்று (13) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மனுவினை கையளித்துள்ளார்கள்.
இதன் பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கருத்துரைத்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழில் துறையில் மாவட்டத்தில் 20 வீதமான மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் 71 கிலோமீற்றருக்கு மேல் கடல்வளம் உள்ளது மாவட்டத்தில் உள்ள பிரச்சினை இந்த மீன்வளம் சட்டவிரோதமான முறையில் வளம் அழிக்கப்படுகின்றது.
இதில் முக்கியமாக இந்திய கடற்தொழிலாளர்களால் வந்து சட்டவிரோதமான முறையில் கடல்வளம் அள்ளிச்செல்லப்படுவது இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.
சட்டவிரோத நடவடிக்கை
அடுத்தது இலங்கையில் உள்ள கடற்தொழிலாளர்களும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் ஆழ்கடலில் சென்று சட்டவிரோத உபகரணங்களை பாவித்து கடற்தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடி தற்போதைய அராசாங்கத்தின் கொள்கை இந்த சட்டவிரோதமான செயல்கள் எல்லாத்தினையும் இயன்றவரைக்கும் கட்டுப்படுத்துவது மீன்பிடி துறையினை விட பெரிய பிரச்சினை போதைப்பொருள் ஓரளவிற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு ஊடாக கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதேபோல் இவ்வாறு பல பிரச்சினை உள்ளது அதில் ஒன்று மீன்பிடி தொடர்பான பிரச்சினை கரைவலைக்கு உழவியந்திரம் பயன்படுத்துவது ஆறுமாதத்திற்கு முன்னர் தடைசெய்யப்பட்டது. அவர்கள் தவணைகேட்டது இப்போதுஅது நடைமுறைக்கு வந்துள்ளது சட்டத்திற்கு விரோதமான விடயத்தினால் பாதிக்கப்பட்டது என்பது பிழையான விடையம் முல்லைத்தீவில் உதாரணத்திற்கு காணியினை அதிகளவில் வைத்திருப்பவர்கள் இன்னும் கள்ளக்காணிகளை பிடித்துக்கொண்டு எதிராகவும் நிக்கின்றார்கள்.
உண்ணாவிரதம்
சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் செய்தோ பிரயோசனம் இல்லை அதனை அங்கிகரித்தால் சட்டவிரோதத்திற்கு அரசாங்கம் அங்கிகரித்த என வந்துவிடும் ஆனபடியால் கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் மிகவிரைவில் கட்டுப்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய இழுவைப்படகுகள் எதிர்காலத்தில் வருவதும் தடைப்படும் என நினைக்கின்றேன் அவ்வாறு வந்தால்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். வறுமையில் முதலாவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது கடற்தொழிலாளர்களின் பிரச்சினையினை உரிய இடத்திற்கு நாங்கள் அனுப்புவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam