பருத்தித்துறை நகரசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை
பருத்தித்துறை நகரசபையால் பருத்தித்துறை நவீன சந்தை தொகுதிக்கு மீண்டும் மரக்கறி சந்தையை கொண்டு செல்வதற்க்காக சாத்தியப்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்க்காக கடந்த ஏழாம் மாதம் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அச் சபையின் அறிக்கை இன்றைய பருத்தித்துறை நகரசபையின் விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ருந்த நிலையில் அதனை ஏற்கொள்வதற்க்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருந்த நிலையில் மொத்தம் 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த நிபுணர்குழு அறிக்கையில் சாட்டட் பொறியியலாளர் தலமையில் நிர்வாக அதிகாரிகள், பொறியியலாளர்கள், கல்வி அதிகாரிகள், நில அளவையாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளடங்கலாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த குழு பரிந்துரையாக நவீன சந்தை தொகுதியில் கீழ்த்தளத்திற்கு மீணடும் சந்தையை கொண்டு செல்வதற்கு போதிய வசதிகள் காணாது என்றும் அதற்கு ஏற்றால்போல் கீழ்த்தளம் மாற்றி அமைக்கும்வரை மரக்கறி சந்தையை நவீன சந்தையின் மேல்தளத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் புதிதாக அமைக்கப்பட்ட சந்தையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அதனை பருத்தித்துறை நகரின் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்து சுற்றுலா மைய்யமாக மாற்றலாம் என்றும் அதில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வறிக்கை விவாதத்திற்கு ஏடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் NPP உறுப்பினர்கள் இருவரும், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்த நிலையில் 3 வாக்குகள் எதிராகவும் 12 வாக்குகள் சார்பாகவும் அளிக்கப்பட்டதனால் பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் நகர சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம் பெற்றன. இன்றைய அமர்வு நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது.
இதில் 15 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். வழமைபோன்று இன்றும் பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையிலும் மரக்கறி சந்தையை பழைய இடமான நகரின் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றவதற்க்கான நிபுணர குழு அறிக்கை 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.


