பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்: றஜீவன் எம்.பி
பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை ஆண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான், வடக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள ஆய்வை மேற்கொண்டோம்.
அபிவிருத்தித் திட்டங்கள்
இந்தப் பகுதி இயற்கை எழில், கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால், வடக்கு மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இதனை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri