ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரசன்ன ரணதுங்க மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தமை தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட கருத்து.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு அல்ல.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு உறுப்பினர்கள் ஏற்கனவே களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
