சுப முகூர்த்தத்திற்காக காத்திருக்கும் மகிந்த தரப்பு
பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நாளைய தினம் சுப முகூர்த்தத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றையதினம்(06) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் இணைவர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திற்குள் மக்களின் விருப்பத்தை வென்றெடுக்கும் திறன் எமது வேட்பாளருக்கு உண்டு.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். நாட்டை நேசிக்கும் பலர் எம்முடன் கைகோர்ப்பார்கள்.
மேலும், தற்போதுள்ள அரசாங்கம் ரணிலின் அரசாங்கம் அல்ல, இது நாம் உருவாக்கிய அரசாங்கம், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் தான் உள்ளோம். இது மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அரசாங்கம்.
அத்துடன் பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை. ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கொள்கைப் பிரச்சினை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
