மொட்டுவில் இணைவதற்கு மூன்று கட்சிகள் கலந்துரையாடல்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்து பிரிந்து சென்ற கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று (18.02.2026) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் பிவிதுரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையிலேயே சந்திப்பு நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் தலைவராக இருந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த பிரதித் தலைவர் மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இந்த சிறப்பு சந்திப்பில் இணைந்து கொண்டிருந்திருந்தனர்.
Held a discussion today at the Nelum Mawatha party headquarters with representatives of “Mahajana Handa” on safeguarding democratic rights in Sri Lanka. Thank you for visiting us, every party must uphold and communicate its core values, and together we will continue to stand… pic.twitter.com/fXY0IrxBbQ
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 18, 2026
இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு அரசாங்கத்தின் கீழ் மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam