நாமலின் இடத்திற்கு கஞ்சன விஜேசேகர.. ரணில் தீட்டும் புதிய திட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூப்பு, உடல்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை நிரப்ப, இளம் தலைவரான கஞ்சன பொருத்தமானவர் என பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கட்சி அமைப்பை இளம் தலைவரிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியதுடன், எரிபொருள்/மின்சார நெருக்கடிகளை கையாண்ட திறமையின் அடிப்படையில் கஞ்சனவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டணி
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு ரணில் அழைப்பு விடுத்தபோதிலும், கஞ்சன அரசியலிலிருந்து சற்று விலகியிருக்கவே விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நாமல் ராஜபக்சவும் கஞ்சனவைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதுடன், 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமலுக்கு ஆதரவாக அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் யோசனையும் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன் பின்னணியிலேயே மாத்தறையில் அடுத்த மக்கள் பேரணியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ராஜபக்ச குடும்பத்திற்கு அப்பால் இளம் தலைமுறையை ஈர்க்கும் நோக்கில் இந்நகர்வு பார்க்கப்படுகிறது. கஞ்சனவை முன்னிறுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் UNP மற்றும் மொட்டுக்கட்சி இடையே புதிய கூட்டணியை உருவாக்க ரணில் தரப்பு கணக்கிடுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கஞ்சன மீண்டும் மொட்டுக்கட்சியில் இணைவாரா அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பாரா என்பதில் இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri