மொட்டுக்கட்சியின் இருவர் சுயேட்சைக்குழுவில் போட்டி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபையின் உப தலைவர் பிரின்ஸ் குணசேகர சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தொலைக்காட்சி சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகிறார். பிரின்ஸ் குணசேகர தொடர்ந்து 30 ஆண்டுகள் தோல்வியடையாது கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார்.
பிரின்ஸ் குணசேகரவுடன் பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் விஜித ரத்நாயக்கவும் இந்த சுயேட்சைக்குழுவில் போட்டியிகிறார்.
அதேவேளை கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் அந்த கட்சியின் கீழ் போட்டியிடவில்லை என்பது முக்கியமானது.
கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபை கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச சபைகளில் ஒன்று.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam