சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது
சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போரா பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர், அப்பிரதேசத்தை தனது ஸ்மார்ட் போன் ஊடாக காணொளிப் பதிவு செய்துள்ளார்.
விசாரணைகள்
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போரா பள்ளிவாசலை இலக்கு வைத்து நாசகார செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அவர் குறித்த காணொளிகளைப் பதிவு செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அவரிடம் இருந்த கைத்தொலைபேசியும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri