பாதாள உலக “பொடி லசி” குறித்து நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட செய்தி
பாதாள உலக உறுப்பினரான “பொடி லசி” என்ற ஜனித் மதுஷங்கவை தடுப்பு காவல் உத்தரவு முடிவடைந்தவுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்
பொலிஸ் மா அதிபரின் சட்டத்தரணி இன்று இதனை மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.
மதுஷங்கவின் தடுப்புக்காவல் எதி்ர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதன்பின்னர் அவரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸ் அதிபர் அறிவித்துள்ளார்.
பூஸ்ஸ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு “பொடி லசி” தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் பொடி லசிக்கு தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
