தனக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தானே ஏற்பாடு செய்த மகிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதவி விலகவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடுவார் என்ற உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்த கூறியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தம்மை பதவி விலகவேண்டாம என்று கூறும்போது, தாம் எவ்வாறு பதவி விலகமுடியும் என்பதை சுட்டிக்காட்டவே மகிந்த இந்த போராட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளதாக தயாசிறி தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam