சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு பிரதமர் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்

Buddha Certificate Mahinda Rajapaksa
By Kanamirtha Dec 28, 2021 02:44 PM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை திறந்துவைப்பு மற்றும் முதலாவது மலர் பூஜை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று (28) இடம்பெற்றது.

இரத்தினபுரி ஸ்ரீ சுமனாராம விகாரஸ்தானாதிபதி கரவிட உபனந்த தேரர், புதிய சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச புத்தர் சிலைக்கு முதலாவது மலர் பூஜை நிகழ்த்தினார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கமைய சமாதி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், அதற்கான நிர்மாணப் பணிகளை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் மேற்கொண்டிருந்தது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தரும், பொத்குல் ரஜமஹா விகாரை மற்றும் பெல்மதுல்ல ரஜமஹா விகாரை ஆகியவற்றின் உபய விகாராதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புண்ணிய நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்துச் சுட்டிக்காட்டிய தேரர், புத்தசாசன அமைச்சு போன்றதொரு அமைச்சு அது தொடர்பிலான புரிதலைக் கொண்ட பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்துப் பாராட்டு தெரிவித்து அனுசாசனம் நிகழ்த்தினார்.

கொடகவெல ஸ்ரீ மஹிந்த மஹா விகாராதிபதி, சியம் மஹா நிகாயவின் மல்வத்து பீடத்தின் சப்ரகமுவ மாகாண நீதிமன்ற சங்கநாயக்கர் கொம்பிடியே சுசீல தேரரும் இதன்போது அனுசாசனம் செய்தார்.

இந்நாட்டில் குளங்களும் தாது கோபுரங்களும் மன்னர்களினாலேயே நிர்மாணிக்கப்பட்டன என்ற கலாச்சாரத்தை மாற்றி பிரதமர் அண்மையில் அனுராதபுரத்தில் சந்தஹிரு சேய தாது கோபுரத்தை நிர்மாணித்தார்.

இவ்வாறு பல புண்ணிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் நாம் எப்போதும் நேசிக்கும், நாம் எப்போதும் மதிக்கும் மற்றும் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எமது பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகுந்த பலம் பெற பிரார்த்திக்கிறோம்.

இன்னும் மூன்று தினங்களில் பிறக்கவிருக்கும் 2022 ஜனவரி 01 திகதி முதல் இந்நாட்டை புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு உங்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்கட்டும்! என ருவண்புரவில் எட்டு தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மஹாசங்கத்தினர் பிரார்த்திக்கின்றனர் என்று கொம்பிடியே சுசீல தேரர் குறிப்பிட்டார்.

சமாதி புத்தர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்கள் இதன்போது பிரதமரினால் பாராட்டப்பட்டு அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மஹா சமன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர், பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, அகில சாலிய எல்லாவள, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளர் கஞ்சன ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் ரஞ்சித் பண்டார, சப்ரகமுவ மாகாண தலைமைச் செயலாளர் சுனில் ஜயலத், இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோதாகம, சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மீகார ஜயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US