பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்! மோடி எச்சரிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஒபரேஷன் சிந்தூர் நகர்வு குறித்து இந்திய மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
''ஒபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை.
இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.
பாகிஸ்தானின் நடவடிக்கை
பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.
தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின.
இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது. போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும். நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம்" இவ்வாறு அவர் கூறினார்.
எனினும் இந்த கருத்துக்கு பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதில் கருத்துக்களும் இதுவரையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |