கோவிட் சடலங்களை அடக்கம் செய்யலாம் என பிரதமர் கூறவில்லை - கோகிலா! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய தகவல்
கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்யலாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறவில்லை என இலங்கை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் எதனையும் கூறவில்லை.
பொதுவாக உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்றே பிரதமர் நேற்று முன் தினம் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ தீர்மானங்களை எடுக்க அதிகாரம் கிடையாது.
நாடாளுமன்றில் சிலர் பாலர் பாடசாலை பிள்ளைகள் இருப்பதனால் இவ்வாறு பிரதமரினால் கோவிட்-19 சடலங்கள் பற்றிப் பதிலளிக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோவிட் தொற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதி
பிரதமரை அவதூறு செய்ய வேண்டாம் - அரசாங்கத்திடம் ரவூப் ஹக்கீம் கோரிக்கை