அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து!
யாழ்ப்பாணம்- அராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று(21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த உழவியந்திரமானது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளை, வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மின்சார இணைப்பு சேதம்
இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து உழவு இயந்திரத்தின் மீது விழுந்திருந்தாலும் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

விபத்தின்போது சேதம் ஏற்பட்ட மின்சார இணைப்பினை சரி செய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam