யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாதகல் அலுவலகத்தின் பரிதாபநிலை (Video)
மாதகலில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்று மேற்கூரை இன்றி பரிதாபமான நிலையில் இயங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என எழுதப்பட்டுள்ளதோடு அந்த அலுவலகம் தற்சமயம் இயங்கி வருவதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் உட்புறம் காணப்படுவதோடு கை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு கதிரைகள், ஒரு மேசை, நிலத்திற்கு நில விரிப்பு என்பன விரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் இராமநாதன்
என் கனவு யாழ். எனக்கூறி, யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகக்
கூறி வருகின்ற நிலையில் அவர் தனது அலுவலகத்தையே இவ்வாறு வைத்திருப்பது
கேலிக்கிடமாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் கேலி செய்து வருகின்றனர்.



பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam