கெஹெல்பத்தர பத்மேவின் உயிருக்கு அச்சுறுத்தல்: தாயார் மனுதாக்கல்
கெஹெல்பத்தர பத்மே, குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அமர்வு
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் இணக்கத்துடன் உறுதிமொழி நீட்டிப்பு செய்யப்பட்டது.
மேன்முறையீட்டுப் நீதிமன்றின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மனு அழைக்கப்பட்டது.
இதன்போது மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த டிசம்பர் 2 ஆம் திகதி மனுவை அழைக்குமாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அப்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டோம் என்று பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அளித்த முந்தைய உறுதிமொழியை அந்தத் திகதி வரை நீட்டிக்குமாறு கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, அடுத்த நீதிமன்றத் திகதி வரை குறித்த உறுதிமொழியை நீட்டிக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan