மக்களின் பிரச்சினைகளை திசை திருப்ப நாடகம் ஆடும் அரசாங்கம்
மக்களின் பிரச்சினைகளை மடை மாற்றுவதறகாக அரசாங்கம் தற்போது பல்வேறு நாடகங்கள காட்சிப்படுத்தி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார( Rohana Bandara) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகிறது.
வெளியேறுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகின்றது. எனினும் அவை அனைத்தும் நடிப்பு. அரசாங்கத்தில் இருந்து விலகுபவர்கள், வெளியேற்றப்படுவர்கள் என எவருமில்லை.
அரசாங்கத்தின் இந்த நாடகங்களை பார்த்து ஏமாந்து விட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் எப்படியான நாடகத்தை நடத்தட்டும். மக்கள் அறிவுடன் சிந்தியுங்கள்.
உண்மையான பிரச்சினைகள் உட்பட மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பவே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்திற்குள் பல நாடக குழுக்கள் இருக்கின்றன எனவும் ரோஹன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam