தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் (Video)
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கட்சி பேதமின்றி அணைவரும் ஒத்துழைப்பு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
அத்தோடு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நிம்மதியற்று வாழ்ந்து வருகின்றோம்.
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தியும், தோட்டத் தொழிலாளர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு தொழிற்சாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan