மேன்முறையீட்டு நீதிமன்ற பரிசீலனைக்கு சென்றுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன வர்த்தமானி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாக்குமாறு கோரி தோட்டக் நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வரையறுக்கப்பட்ட அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 பெருந்தோட்ட நிறுவனங்களால், தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உட்பட 52 பேரை மனுதாரர்கள் பெயரிட்டுள்ளனர்.
நீதியின் சட்டக் கோட்பாடு
பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச நாளாந்த குறைந்தபட்ச வேதனத்தை 1350 ரூபாயாகவும், விசேட நாளாந்த கொடுப்பனவை 350 ரூபாயாகவும், மேலதிக கொடுப்பனவை 80 ரூபாயாகவும் நிர்ணயம் செய்து தொழில் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழில் அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்த இந்த முடிவு இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த முடிவை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்ததாக கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |