அரசாங்கத்தை பொருட்படுத்தாத பெருந்தோட்ட கம்பனிகள்: செந்தில் தொண்டமானின் கோரிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காத கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), தொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1700 ரூபாய்களாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தும் 1,700 ரூபா நாள் சம்பளம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தை பொருட்படுத்தாத கம்பனிகள்
எனினும், 21 பெருந்தோட்டக் கம்பனிகள் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றாமல் செயற்படுவதாக செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த கம்பனிகள் 2021ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சம்பள கொடுப்பனவுகளை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
