விமானப்படையை நவீனமயமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
எதிர்கால சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் விமானப்படையை நவீனமயமாக்கும் மற்றும் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக விமானப்படை தளபதி உதயெனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் பொருள் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ரக விமானங்கள்
மேலும் தெரிவிக்கையில், இதன்படி இரண்டு C130 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைகளை அமெரிக்க விமானப்படையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது வைத்திருப்பதை விட புதிய ரக விமானங்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில், விமானப்படை அதன் விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு புதிய Y12 விமானங்களை ஏற்கனவே கொள்வனவு செய்துள்ளது.
இலங்கையின் நலன்கள்
மேலும், 360ER மற்றும் KA 350 ரகங்களை உள்ளடக்கிய இரண்டு பீச் கிங் ஏர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்தும் அவுஸ்திரேலியாவிடமிருந்தும் கொள்வனவு செய்வதற்கு விமானப்படை தயாராக உள்ளது.
இந்த விமானங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதில் முக்கியமான அம்சமான கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்படும் என்றும் இலங்கையின் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |