இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் கடுமையான கண்காணிப்பின் பின்னரே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நீண்ட கால இறக்குமதியை தடை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடு இறக்குமதிகளை நிறுத்த வேண்டியிருந்தது, இதன் மூலம் மட்டுமே நாங்கள் இருப்புகளைப் பாதுகாத்தோம் மற்றும் இருப்புக்களை பூஜ்ஜியத்திலிருந்து 3 ADOB ஆக அதிகரித்தோம்.
ஒரு நாடு நீண்ட காலத்திற்கு இறக்குமதியை தடை செய்ய முடியாது. நாடு சிறிது சிறிதாக திறக்கப்பட வேண்டும்.
நாம் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு வளமான பொருளாதாரமாக விரிவுபடுத்துகிறோம், சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது என்பது இதில் மிக முக்கியமான விடயம்.
எந்தவொரு பொருளின் மீதான இறக்குமதித் தடையை நீக்கும் போது நாங்கள் எல்லா பக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கிறோம்.
அதன் தேவை, அதன் மாற்றீடுகள் போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |