சுரேஷ் சலேயின் மனைவியை போன்று நாமலின் மனைவிக்கும் கடும் அழுத்தம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடாத்தப்படும் விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவிற்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் மனைக்கு வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம், போன்ற அழுத்தம், நாமலின் மனைவிக்கும் பிரயோகிக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் நாமல் ராஜபக்சவின் மனைவியைப் பிரசார உத்தியாக கலந்துகொள்ள செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாமலின் மனைவிக்கு அழுத்தம்
அதற்காக திஸக்குட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுஜன கட்சி மேலும் வங்குரோத்து அடைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு நடுவழியில் கைவிடப்பட்டுள்ள விதம் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.