புறப்பட்ட இடத்திலேயே திடீரென தரையிறங்கிய விமானம்
ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் விமானச் சேவைக்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானத்தில் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே விமானம் அவசர அவசரமாக அதே விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அலாஸ்கா விமானச் சேவை
குறித்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்த நிலையில் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக அலாஸ்கா விமானச் சேவைக்கு சொந்தமான போயிங் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். பின்னர் விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |