திருகோணமலை - நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை - நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
விமானிகளுக்கான அடிப்படை பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று காலை 10.22 மணிக்கு சீனக்குடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
விமானிகளின் சாதுர்யத்தினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட
தரப்பினருக்கு விமானப்படை கமாண்டர், எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண
அறிவுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam