அமெரிக்காவில் கட்டடமொன்றில் மோதிய விமானம்
அமெரிக்காவின்(USA) - கலிபோர்னியா மாநிலத்தில்(California) சிறிய ரக விமானம் ஒன்று நேற்று(02) வர்த்தக கட்டடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒற்றை இயந்திரம் கொண்ட RV-10 ரக சிறிய விமானம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் பலி
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
⚡️A small single engine plane (N8757R) crashed into the roof of a warehouse near Fullerton Municipal Airport, US. pic.twitter.com/7dTdrE6p2Y
— Resistance War News (@ResistanceWar1) January 3, 2025
மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்கள் விமானப் பயணிகளா அல்லது அது விபத்துக்குள்ளான கட்டடத்தில் பணிபுரிந்தவர்களா என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |