நாடாளுமன்றத்திற்கு மேல் விமானம் பறக்க அனுமதி
நாடாளுமன்றத்திற்கு மேல் விமானம் பறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் மேல் விமானம் பறப்பதற்கு யாரேனும் அஞ்சுகின்றீர்களா என அவர் எதிர்க்கட்சிணரை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
அவ்வாறு எவருக்கேனும் அச்சம் இருந்தால் தற்பொழுது கூறி விடுங்கள் என அவர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அச்சப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் மிக நீண்ட காலமாக நாடாளுமன்ற பகுதியில் மேல் விமானங்கள் பறப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரத்மலானை விமான ஓடு பாதை நாடாளுமன்றம் அமைந்துள்ள திசையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெரிய விமானங்கள் வந்தால் அந்தப் பகுதியில் இருந்து விமானத்தை இயக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அவ்வாறு விமானங்கள் பறப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் விமான நிலையத்திலிருந்து பெரிய விமானங்களை இயக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்றிற்கு மேல் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி வழங்க தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri