கஜேந்திரகுமார் எம்.பியின் இல்லத்தை முற்றுகையிட திட்டம்: அம்பலப்படுத்திய மொட்டு கட்சி எம்.பி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி கொழும்பில் அமைந்துள்ள கஜேந்திரகுமாரின் இல்லைத்தை நாளை (25.08.2023) சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24.08.2023) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
வீட்டை முற்றுகையிட திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், காலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்தேன்.
இதன்போது நாளை இடம்பெறவுள்ள செயற்குழுவில் தன்னால் பங்குபற்ற முடியாது என்றும் கொழும்பிலுள்ள தனது இல்லத்தை ஒருசிலர் முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்குபற்றவுள்ளதாகவும் கூறினார்.
கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினர். எனவே, அவ்வாறானவொரு திட்டமிருந்தால் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவேண்டும்.
இடமளிக்க முடியாது
ஒவ்வொருவரும் நினைத்தபடி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைச் சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது.
ஆகவே, இது பாரதூரமான பிரச்சினையில் அவருக்கும் அவரது இல்லதுக்குமான பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




