காசாவில் நவீன நகரத்தை உருவாக்கும் இரகசிய திட்டம்..! காசா மக்களை நாடுகடத்த யோசனை
காசா மக்களை கிழக்கு ஆபிரிக்காவில் குடியமர்த்துவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசா மக்களை ஜோர்டான் மற்றும் எகிப்தில் குடியேற்றுவது குறித்துப் டிரம்ப் ஆலோசனை செய்திருந்தார்.
இரகசிய திட்டம்
அத்துடன், காசாவை நவீன மனை நகரமாக உருவாக்குவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.
குறித்த திட்டத்தை அரபு நாடுகளும் பலஸ்தீனியர்களும் முற்றிலுமாக நிராகரித்திருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, காசா மக்களை ஆபிரிக்க நாடுகளுக்கு நாடு கடத்தும் இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
எனினும், சூடான் அமெரிக்க முன்மொழிவை நிராகரித்துள்ளது எனவும் சோமாலியாவும் சோமாலிலாந்து ஆகிய நாடுகள் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
