நீதிமன்றங்களின் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டம்
நீதிமன்றங்களின் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நிதி பிரச்சினைகளுக்காக,சிறப்பு மத்தியஸ்த சபைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தின் கீழ், கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிதி பிரச்சினைகளுக்காக சிறப்பு மத்தியஸ்த சபைகள் நிறுவப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மத்தியஸ்த செயல்முறைக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாகும்.
மத்தியஸ்த சபைகள்
அத்துடன், 2025 பாதீட்டில் மத்தியஸ்த சபை ஆணையத்திற்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, மத்தியஸ்த சபைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன, 16 மாவட்டங்களில் காணி பிரச்சினை தொடர்பில் சிறப்பு மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
