நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு! அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்
இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது.
தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை அதிகரித்தல்
தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக நேற்று(10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி
கடந்த இரண்டு மூன்று வருடங்களைப் பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டில் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.
தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்ச்சி கடந்த மாதம் 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri
