கொழும்பில் உள்ள ஏழு அரசாங்க பங்களாக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
கொழும்பில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அமைச்சர் பங்களாக்களையும் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
முதலீட்டு நோக்கங்கள்
அரச வருவாயை அதிகரித்தல், புதிய வணிக வாய்ப்புகளையும், சுற்றுலா ஈர்ப்புகளையும் உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு எடுத்துள்ளது.
கொழும்பு 05, ஸ்டேன்மோர் கிரசென்ட் (Stanmore Crescent) உள்ள B13, B14 மற்றும் B20 ஆகிய பங்களாக்களும், மலலசேகர மாவத்தையில் உள்ள C61 மற்றும் C62 ஆகிய பங்களாக்களும், ஸ்கெல்டன் வீதியில் உள்ள E01 மற்றும் E02 ஆகிய பங்களாக்களும் முதலீட்டு நோக்கங்களுக்காக வழங்கப்பட உள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5