தொழிற்சங்கங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் திட்டம்
தொழிற்சங்க செயற்பாடுகள் ஒழுங்குப்படுத்தல் திட்டம் ஒன்று அமுல் செய்யப்பட வேண்டும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் தொழிற்சங்கங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தொழிற்சங்க சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் தொழில்படையில் 35 வீதமானோர் பெண்களாவர்.
எனவே அவர்களின் பிரதிநிதித்துவம் தொழிற்சங்கக் கட்டமைப்புக்குள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam