இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வாழைப்பழம்! சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டம்
எதிர்வரும் காலங்களில் பல வகையான வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் சில வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதன்படி, நாட்டில் விளையும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் படி தற்போது ஒவ்வொரு வாரமும் துபாய் சந்தைக்கு 12,500 கிலோகிராம் புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.