கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கைத் துறைமுக அதிகாரசபை திட்டம்
கொழும்புத் துறைமுகத்தை வெறும் கொள்கலன் பரிமாற்றத் துறைமுகமாக அல்லாமல், தென்னாசிய பிராந்தியத்தில் ஒரு விரிவான கடல்சார் மற்றும் தளவாடங்கள் மையமாக மாற்ற இலங்கைத் துறைமுக அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
பொது - தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ், வெளிப்படையான போட்டிப் போட்டிப் புள்ளி கோரல் முறை மூலம் இந்த புதிய ஒருங்கிணைக்கப்பட்ட தளவாட மையம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குதாரர்கள் தீர்மானம்
முன்னதாக 280 மில்லியன் டொலர் செலவில் சீனா மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தெற்காசிய வணிக மற்றும் தளவாட மையம் (SACLH) கூட்டுத் திட்டத்தை கைவிட பங்குதாரர்கள் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இந்த புதிய மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்குச் சொந்தமான காணியை சிறந்த முறையில் பயன்படுத்தி, தனியார் முதலீடுகளை ஈர்த்தல், கப்பல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிப் பங்காளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல் மற்றும் நீண்டகால நிலையான வருவாயை ஈட்டுதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.